கேடிஎம் 390 டியூக் மற்றும் வரவிருக்கும் பஜாஜ்-ட்ரையம்ப் பைக்குகளுக்கு சவால் விடுக்கும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 பைக் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் கசிந்துள்ளது.
சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு அட்வென்ச்சர் ஹிமாலயன் 450 பைக் மாடலில் இடம்பெற்றிக்கின்ற அதே என்ஜினை இந்த மாடலும் பகிர்ந்து கொள்ள உள்ளது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 40 hp பவர் வெளிப்படுத்தலாம்.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450
17 அங்குல வீல் பெற்ற மாடல் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 பைக் மாடல் மிகவும் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் லிக்யூடு கூல்டு என்ஜின் இடம்பெற்றிருப்பதனால் மிக சக்திவாய்ந்த என்ஜின் ஆக இருக்கும்.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம். இந்த 450cc என்ஜின் பெற்ற மாடல் வரிசையில் அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் 450, தற்பொழுது ஹண்டர் 450 உட்பட ஃபேரிங் ஸ்டைலை பெற்ற மற்ற சில மாடல்களும் எதிர்பார்க்கலாம்.
image – motorrdonline
ஏற்கனவே, ஹிமாலயன் 450 பைக் மாடல் சோதனை ஓட்டத்தில் உள்ளதால் அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம். ஹண்டர் 450 பைக்கின் விற்பனை அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாகலாம்.