என் மகள் அவருடைய கணவரை பிரித்தானியாவின் பிரதமராக்கினார் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுதா மூர்த்தி கருத்து
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி, சமீபத்தில் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில், “எனது மருமகன்(பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்) ஒரு பஞ்சாபி, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக அவர்களது குடும்பம் பிரித்தானியாவில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
I made my husband a businessman. My daughter made her husband Prime Minister of UK !
– Sudhamurthy pic.twitter.com/031ByqhDWZ
— Vishweshwar Bhat (@VishweshwarBhat) April 23, 2023
அவர் ஒரு இறை நம்பிக்கையாளர், திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ரிஷி சுனக் விரதம் அனுசரிப்பவர், இவை அனைத்திற்கும் அவரது மனைவியின் செல்வாக்கே காரணம், ஒரு மனைவி தன் கணவனை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை இதன் மூலம் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கை பிரதமராக்கியது என் மகளே
மேலும், அந்த வீடியோவில் நான் என் கணவனை மிகப்பெரிய தொழிலதிபராக்கினேன், ஆனால் என் மகள் அக்ஷதா மூர்த்தியோ அவரது கணவர் ரிஷி சுனக்கை பிரித்தானியாவின் பிரதமராகி உள்ளார்.
இதுவே மனைவிகளின் மகிமை என்று அந்த வீடியோவில் சுதா மூர்த்தி பேசுவது கேட்க முடிகிறது.
அத்துடன் சிறிது காலத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியான அக்ஷதா மூர்த்தியை மந்த்ராலயாவுக்கு அழைத்து வருவேன் என்றும் சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.