ஷீரடி சாய்பாபா கோயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த எதிர்ப்பு.. கோயில் காலவரையின்றி மூடப்படும் – ஷீரடி அறக்கட்டளை

மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்துவதை கண்டித்து வரும் 1 ஆம் தேதி முதல் கோயில் காலவரையின்றி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் நிர்வாகத்தில் உள்ள இந்த கோயிலில் பாதுகாப்பு பணிகளை உள்ளூர் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 1ஆம் தேதி முதல் சாய்பாபா கோயில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோயிலில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரால் சரிவர பக்தர்களை கையாள முடியாது என அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.