D.T.Ed தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில்,

ஜூன் 2023-ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக 09.05.2023 (பிற்பகல்) முதல் 13.05.2023 வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள Web Camera வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை

பதிவேற்றம் செய்து உரிய தேர்வுக் கட்டணத்தினை செலுத்தவேண்டும்.

தேர்வுக் கட்டணவிவரம்:

ஒவ்வொருபாடத்திற்கும் ரூ.50/-

மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு) ரூ.100/-

மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100/-

பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15/-

ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.70/-

மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்!

சிறப்புஅனுமதித் திட்டம் (TATKAL)

09.05.2023 முதல் 13.05.2023 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் (TATKAL ) 15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதிக் கட்டணமாக கூடுதலாக ரூ.1000/- செலுத்த

வேண்டும்.

பொதுவானஅறிவுரைகள்

.

தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தேர்வர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமுக இடைவெளி கடைபிடிக்கவேண்டும்

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.