சென்னை : கங்குவா படத்தின் கதாநாயகியான திஷா பதானியின் அதிரடியாக சண்டை பயிற்சியைப்பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்து போனார்கள்
சூரரைப்போற்று, ஜெய்பீம் படத்திற்கு பிறகு, சூர்யா நடிக்கும் படங்கள் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவின் கங்குவா : சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
பவர் ஆப் ஃபயர் : இப்படத்தின் தலைப்பு வெளியானபோது, கங்குவாவிற்கு அர்த்தம் தெரிந்து கொள்ள கூசூளில் வலைவீசி தேடினார்கள். மேலும், ரஜினிகாந்த் நடித்த ஒரு இந்தி படத்தில் தலைப்பு இது என படத்தின் தலைப்பு குறித்து பல கருத்துக்கள் இணையத்தில் தீயாக பரவின. இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குநர், கங்குவா என்பது படத்தில் நாயகனின் பெயர் என்றும் கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்றால் பவர் ஆப் ஃபயர் என்று அர்த்தம் என்றார்.
— Disha Patani (@DishPatani) April 28, 2023
10க்கும் மேற்பட்ட மொழியில் : பெரும் பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான saregama south கைப்பற்றி உள்ளது. 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆத்தாடி என்னா அடி : இந்நிலையில், கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பாலிவுட் நடிகை திஷா பதானி, லேடி ஜாக்கிசான் போலடேக்வாண்டே ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பாய்ந்து தாவி அதிரடியாக தாக்குகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கங்குவா படத்துல தரமான சம்பவம் இருக்கும் போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.