ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பொன்னியின் செல்வன் 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் காலேஜ் ஃபேர்வெல் நிகழ்ச்சி போன்று இருப்பதாக நடிகர் கார்த்தி உருக்கமாக பேசியது வைரலாகி வருகிறது.
செய்தியாளர் சந்திப்புபொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர். படத்தின் ரிலீஸை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். PS2 Review: பிளாக் பஸ்டர் ஹிட் கேரண்டி… பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு குவியும் பாஸிட்டிவ் விமர்சனம்!
பெரும் பாக்கியம்அப்போது பேசிய நடிகர் கார்த்தி, தான் மணிரத்னம் ஆபீஸில் வேலை செய்தபோது எக்ஸல் ஷீட்டாக பொன்னியின் செல்வனை பார்த்திருப்பதாகவும் அப்போது ஒன்றுமே புரியவில்லை என்றும் கூறினார். எவ்வளவோ ஹீரோக்கள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கேரக்டர் தனக்கு கிடைத்து அதை முழுவதுமாக செய்ததை பாக்கியமாக நினைப்பதாகவும் கார்த்தி உருக்கமாக கூறினார்.
PS 2 Trisha: நானும் ஐஸ்வர்யாவும் விக்ரமை தூங்க விடமாட்டோம்… அவர் கத்துவார்… உருக்கமாக பேசிய த்ரிஷா!
இனிமேல் உங்களுடையதுவந்தியத்தேவனை நீங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க என்று எவ்வளவோ பேர் தன்னிடம் சொல்லும் போது சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்த கார்த்தி இதுவரை பொன்னியின் செல்வன் எங்களுடையது. இனிமேல் அது உங்களுடையது என்றார். மேலும் கிட்டதட்ட 3 வருஷம் இந்த படத்துக்காக செலவிட்டது ஒரு காலேஜ் வாழ்க்கை மாதிரி தான் உள்ளது என்றும் கார்த்தி உருக்கமாக தெரிவித்தார்.
Ponniyin Selvan 2 Review: ஃபென்டாஸ்டிக்.. ஓபனிங் சீன் வேற லெவல்… விமர்சகர்களின் பாராட்டு மழையில் பொன்னியின் செல்வன் 2!
மணிரத்னத்தின் கனவு படம்மேலும் இந்த படத்துல நடிச்சவங்க, அதிகமான அன்போட, ஒன்றாக இருக்கிறோம் என்ற கார்த்தி எல்லா மாநிலத்திலேயும் சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் இருக்குன்னா, நமக்கு பொன்னியின் செல்வன் படம் இருக்கு என்றும் பெருமையாக கூறினார். பொன்னியின் செல்வன் படம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம், ஆனால் அதை சொல்லமாட்டார். ராஜராஜசோழனை காட்சிப்படுத்த அவர் எடுத்த மெனக்கெடலை நேரில் பார்த்துள்ளேன் என்றும் உருக்கமாக கூறினார் கார்த்தி.
Hansika Motwani: வாவ்… ஹாலிவுட் நடிகை லுக்கில் ஹன்சிகா மோத்வானி… லேட்டஸ்ட் போட்டோஸ்!
காலேஜ் ஃபேர்வெல் போலமேலும் பொன்னியின் செல்வன் படம் காலத்திற்கும் நிற்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார் என்றும் இந்தப் படத்தில் தான் ஒருபகுதியாக இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி என்றும் நடிகர் கார்த்தி கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பை பார்க்கும் போது காலேஜ் ஃபேர்வெல் பார்ட்டி போல் உள்ளது என்றும் மக்களுக்கு மிகப்பெரிய நன்றி என்றும் நடிகர் கார்த்தி உருக்கமாக பேசினார்.
Nayanthara: நயன்தாராவை நடுரோட்டில் அழவிட்டேன்… மனம் திறந்த விக்னேஷ் சிவன்!
PS 2 Karthi