ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட்தான் என புகழ்ந்து தள்ளுகின்றனர் ரசிகர்கள்.
கடின உழைப்புபொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸை முன்னிட்டு படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் தீயாய் ஈடுபட்டு வந்தனர். பொன்னியின் செல்வன் புராஜெக்ட்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கேரக்டரும் அத்தனை ரிகர்சல், அத்தனை ஹார்டுவொர்க் என 6 மாதத்திற்கும் மேலாக உழைத்து வந்தனர்.
PS 2 Trisha: நானும் ஐஸ்வர்யாவும் விக்ரமை தூங்க விடமாட்டோம்… அவர் கத்துவார்… உருக்கமாக பேசிய த்ரிஷா!
பூர்த்தியான எதிர்பார்ப்புபொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் டிவிஸ்ட்டுகளுடன் நிறைவடைந்ததால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் 2 படம் நிறைவு செய்திருப்பதாகவும், பாகுபலி படத்தை விட பல மடங்கு சிறந்ததொரு காவியமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்துள்ளதாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர்.
Ponniyin Selvan 2 Review: ஃபென்டாஸ்டிக்.. ஓபனிங் சீன் வேற லெவல்… விமர்சகர்களின் பாராட்டு மழையில் பொன்னியின் செல்வன் 2!
ஐஸ்வர்யா ராய்குறிப்பாக ஐஸ்வர்யா ராயின் நடிப்பை பாராட்டி தள்ளுகிறார்கள் ரசிகர்கள். நந்தினியாகவும், ஊமை ராணி மந்தாகினியாகவும் ஐஸ்வர்யா ராயின் பர்ஃபாமன்ஸ் அவுட் ஸ்டாண்டிங் என கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். விக்ரமுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்குமான காட்சிகள் படத்தின் ஹைலைட் என்றும் விமர்சித்து வரும் ரசிகர்கள் படத்தின் ஓபனிங் காட்சியான முதல் 15 நிமிட காட்சிகள் வேற ரகம் எனவும் பாராட்டி வருகின்றனர்.
Ponniyin Selvan2: மீண்டும் அதை செய்த ஐஸ்வர்யா ராய்… திக்குமுக்காடிப் போன மணிரத்னம்!
ஜெயம் ரவி பர்ஃபாமன்ஸ்அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்திற்கு ஜெயம் ரவி முழு நீதியையும் செய்துள்ளார் என்றும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்றும் புகழ்ந்துள்ளனர். பொன்னியின் செல்வன் 2 படத்தில் பல இடங்கள் அவருக்கு கிடைத்ததாகவும், இண்டர்வெல் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார் எனவும் புகழந்து வருகின்றனர்.
அந்த லிஸ்ட்டில் சேர்ந்த சமந்தா!
குவியும் ரேட்டிங்அதோடு ரேட்டிங்கையும் அள்ளி குவித்து வருகின்றனர் ரசிகர்கள். பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்தான் என புகழ்ந்து வருகின்றனர். மேலும் க்ளைமேக்ஸ் போர்க்காட்சிகளையும் புகழ்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். கார்த்தியும் விக்ரம் பிரபுவும் பின்னி பெடலெடுத்துள்ளார்கள் என்றும் தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Aishwarya Rai: பிரமிக்க வைக்கும் பேரழகு… ஐஸ்வர்யா ராயின் அசத்தல் போட்டோஸ்!
PS 2 review