அமெரிக்காவில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
நேருக்கு நேர் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஹீலீ என்ற பகுதியில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
நேற்று முன்தினம் நடந்த இந்த பயிற்சியில், இரண்டு ஹெலிகாப்டர்களும் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டுள்ளது.
AP
இதனை தொடர்ந்து தரையில் மோதிய ஹெலிகாப்டர்கள் முற்றிலுமாக நொறுங்கி போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 வீரர்கள் உயிரிழப்பு
இந்த விபத்தின் போது ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
AP
மேலும் மற்றொரு வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த மற்றொரு வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மீட்பு படையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.