பாகிஸ்தானில் ஒரு குழந்தை இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்துள்ளதால் மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
டிஃபாலியா எனப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக குழந்தை இரண்டு ஆணுறுப்புறுப்புகளுடன் பிறந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைக்கு மலம் கழிக்க ஆசனவாய் இல்லை.
மருத்துவ அறிவியல் வரலாற்றில் டிஃபாலியா தொடர்பாக இதுவரை 100 கேஸ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. முதன் முதலில் 1609 ஆம் ஆண்டு இப்படியான ஒரு குழந்தை பிறந்ததாக பிரபல மருத்துவ பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பிறந்துள்ள குழந்தைக்கு ஒரு ஆண்குறி மற்றொன்றை விட ஒரு சென்டிமீட்டர் நீளமாக இருப்பதாகவும், இரண்டும் சிறுநீர் கழிக்கக்கூடியதாகவும் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசனவாய் இல்லாததால், கொலோனோஸ்கோபி மூலம் துளை ஒன்றை உருவாக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு ஆண்குறி 1.5 சென்டிமீட்டர் நீளமும் மற்றொன்று 2.5 சென்டிமீட்டரும் இருந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து குழந்தை கண்காணிக்கப்படுகிறது.
newstm.in