நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்பது தெளிவாகி தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்த நாட்டு மக்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் தோள்களில் சுமையை ஏற்றுவதாகவும், எதிர்க்கட்சியாக மக்கள் சக்தியைக் கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.