காங்கிரஸ் கட்சியினர் தன்னை 91 முறை அவதூறாக பேசியதாக பிடாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிடாரின் ஹம்னாபாத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பாஜக ஆட்சியின் கீழ் கர்நாடகாவில் மூன்று மடங்கு அந்நிய முதலீடு அதிகரித்துள்ளதாக கூறினார்.
விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதிகள் அளித்து விவசாயிகளையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி மோசம் செய்ததாக குற்றஞ்சாட்டினார். ஏழை மக்களின் வலி மற்றும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி எப்போதும் புரிந்து கொள்ளாது என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன்னை விமர்சித்து பேசியதை குறிப்பிட்ட பிரதமர், தன் மீதான காங்கிரசாரின் அவதூறுகளுக்கு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளால் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.