ஐபிஎல் தொடரில் இன்று அனல்பறக்கும் 2 ஆட்டங்கள்.. எந்தெந்த அணி யாருடன் மோதல்?

கொல்கத்தா,

ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40வது லீக் போட்டியில், டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளன.

மூன்றாவது வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.