இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவகத்தின் (Institute for Security Governance – ISG) வளங்களைக் கொண்டு கடற்படைத் தலைமையகத்தில் 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மூன்று (03) நாட்களாக நடைபெற்ற பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக 2023 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நிறைவு பெற்றது.
இதன்படி, கடற்படையில் மனித வள முகாமைத்துவத்தை அதிகரிப்பதற்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த கடல்சார் புலனாய்வுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், அது தொடர்பான செயற்பாடுகள் மற்றும் கடமைகளைச் செய்யும் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் தேவையான ஆதரவை இந்தப் பட்டறை மூலம் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி பட்டறையில் கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை தொண்டர் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார உட்பட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் கலந்துகொண்டதனர்.
மேலும், பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை அமெரிக்க பாதுகாப்பு நிர்வாகத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர். இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கடற்படைத் தளபதி நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தார்.