போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை, சிறையில் கழிவறை நீரில் காபி தயாரித்து கொடுத்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
போதை பொருள் வழக்கு
பாலிவுட் நடிகையான கிறிசன் பெரேரா என்பவர், ஒரு வெப் தொடரில் நடிக்க ஷார்ஜாவில் நடைபெற்ற நடிகைகள் தேர்வுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது ஷார்ஜா விமானநிலையத்தில், அவரது பையில் போதைப் பொருள் இருப்பதாக கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக துபாயில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட கிறிசன் பெரேரா மீது எந்த தவறும் இல்லை என நிரூபிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கழிவறை நீரில் காபி
இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் சிறையில் கழிவறை நீரில் காபி போட்டு கொடுத்ததாகவும், வாஷிங் பவுடரில் தலைக்கு தேய்ந்து குளித்த மோசமான சிறை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் இந்தியராக இருப்பதிலும், இந்தியாவை சேர்ந்த திரைத் துறையில் பணிபுரிவதையும் பெருமையாக நினைப்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கிறிசினை, ஆண்டனி என்பவர் தான் போதை வழக்கில் சிக்க வைத்துள்ளார் என்றும் இவர் இதுபோல பலரையும் போதை கடத்த பயன்படுத்தியுள்ளார் எனவும் ஷார்ஜா பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.