லண்டனில் பெண்மணி ஒருவர் மாயமாகியுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், அவரிடம் வாள் ஒன்று இருப்பதாகவும், அவரை பொதுமக்கள் நெருங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாயமானதாக பொலிசார்
தெற்கு லண்டனில் உள்ள Penge பகுதியில் வசித்து வந்த 37 வயது சனா என்பவரே மதியத்திற்கு மேல் 4.45 மணியளவில் மாயமானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவரை மீட்க பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பெண்மணி மேற்கு லண்டனுக்கு பயணப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் எனவும், அவரது பாதுகாப்பு தொடர்பில் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Credit: Met Police
சனா தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும், அவரிடத்தில் வாள் இருப்பதாக நம்புவதால், அவரை நெருங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்
கடைசியாக அவர் காணப்படும்போது பச்சை நிற camouflage ஆடைகளை அணிந்து பெரிய camouflage முரட்டுப் பை ஒன்றையும் எடுத்துச் சென்றார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அவரை உடனடியாக கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்பதால் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அவரை நேரில் பார்க்க நேர்ந்தால், அவரிடத்தில் நெருங்காமல் 999 இலக்கத்திற்கு உடனடியாக தொடர்புகொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.