வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: ஆட்கடத்தல் மற்றும் கொலை வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,யுமான அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
உ.பி.,யில் பா.ஜ., எம்.எல்.ஏ., கிஷ்ணகாந்த் ராய் என்பவர் கடந்த 2005 ம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு காசியாப்பூரில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பிரபல கேங்ஸ்டார் மற்றும் அரசியல்வாதியான முக்தர் அன்சாரி மற்றும் அவரது சகோதரர் எம்.பி.,யான அப்சல் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முக்தர் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1 லட்சமும் அபராதமாக விதித்தது.
2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால், அவர்களின் எம்.பி., பதவி தானாக பறிபோகும். இதனடிப்படியில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற அப்சல் அன்சாரியின் எம்.பி., பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement