சாட்ஜிபிடி ராஜ்ஜியத்தில் ரகசியமெல்லாம் கிடையாது..! அம்பலமாகப்போகும் உலகம்..!

சாட்ஜிபிடி ராஜ்ஜியம்

சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்கள் டெக் உலகில் ராஜ்ஜியம் நடத்த தொடங்கியிருக்கின்றன. விரல் நுனியின் உலகின் எந்த தகவலையும் கொண்டு வந்து கொடுக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் இந்த தொழில்நுட்பங்களின் இந்த ஆற்றல் தான் தொழில்நுட்ப உலக வல்லுநர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. எந்த தகவலையும், எந்தவகையிலும் எடுக்கும் சாமார்த்தியும் ஏஐ தொழில்நுட்பங்களிடம் இருக்கின்றன. ஒரு நாட்டின் பாதுகாப்பு, தனி நபர் பாதுகாப்பு என அனைத்துக்கும் இது மிகப்பெரிய தலைவலியாகவும் மாற வாய்ப்புள்ளதாக டெக் உலகம் எச்சரித்துக் கொண்டிருக்கிறது. 

ஏஐ மறுப்பக்கம்

ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைக் கண்டு உலகம் வியந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றின் ஆபத்து காரணிகளின் வீரியத்தை உணரவில்லை என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்திருக்கும் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னணி டெக் ஆய்வு நிறுவனம் பல அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வில், ஏஐ தொழில்நுட்பங்களால் ஒரு நிறுவனம் பாதுகாப்பாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தகவல்கள், சென்சிட்டிவான பைல்களை ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாடு காரணமாக கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளது. 

டேட்டா லீக்கேஜ்

இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் புதிய AI சாட்போட்கள் மற்றும் எழுதும் கருவிகளை நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கினால், அது டேட்டா லேக்கேஜ் மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை, ஒரு நிறுவனத்துக்கு எதிராக எத்தகைய வேலைகளை செய்யவும் ஏஐ சாட்போட்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது. 

ரகசியங்களுக்கு அச்சுறுத்தல்

Microsoft Corp. மற்றும் Alphabet Inc. போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் சாட்போட்கள் மற்றும் சர்ச் எஞ்சின்களை (Search Engine) மேம்படுத்த, பயனர்களின் தேடல்களுக்கான முடிவுகளை ஒரே இடத்தில் வழங்குவதற்காக, இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளில் தங்கள் மாடல்களைப் பயிற்றுவிப்பதற்கு, AI திறன்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். ஏதேனும் இரகசிய அல்லது தனிப்பட்ட தரவுகளை வழங்கினால், இத்தகைய கருவிகளில் இருந்து அந்தத் தகவல்களை அழிப்பது மிகவும் கடினமாக இருக்கும். தனிப்பட்ட தகவல், அறிவுசார் உடைமை, சோர்ஸ் கோட், வர்த்தக இரகசியங்கள் ஏஐ சாட்போட்கள் மூலம் அணுகும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கும் ஆந்த ஆய்வு, இது ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.