வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சான்டோ டொமிங்கோ: எல்லை நிர்வாக ஒப்பந்தங்களை சீனா மீறியதால், அந்நாட்டுடனான உறவு சுமூகமானதாக இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டொமினிகோ குடியரசு நாட்டிற்கு சென்றுள்ள நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தலைநகர் சான்டோ டொமிங்கோ நகரில் கூறியதாவது:
அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா அல்லது ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும், உறவுகள் அனைத்திலும் தனித்தன்மையை தேடாமல் முன்னேறுவதை முயற்சி செய்கிறோம். அதில், சீனா வேறு வகையில் உள்ளது. இதற்கு, எல்லை பிரச்னை மற்றும் உறவில் நிலவும் அசாதாரண தன்மை ஆகியவையே காரணமாக உள்ளது. சீனாவுடனான உறவு சுமூகமானதாக இல்லை. எல்லை விவகாரம் தொடர்பான ஒப்பந்தங்களை அந்நாடு மீறியதால் ஏற்பட்ட விளைவு இது.
தெற்கு ஆசியா பிராந்தியத்தில் தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு திட்டங்கள் மூலம் இந்தியா விரிவாக்கத்தை கண்டுள்ளது. ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் இதற்கு விதிவிலக்காக உள்ளது. அண்டை நாடுகளில் ஏற்பட்ட கோவிட் காலகட்டத்தில் ஏற்பட்ட சவால் ஆகட்டும், கடன் நெருக்கடி ஆகட்டும், உடனடியாக இந்தியா உதவி செய்தது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement