சுயநினைவை இழந்த பஸ் டிரைவர்; துணிச்சலாக செயல்பட்ட மாணவன்| The unconscious bus driver; Brave student

அமெரிக்காவில், பள்ளி ஒன்றின் பஸ் டிரைவர் உடல்நலக் குறைவால் மயங்கிய நிலையில், அதிலிருந்த ஏழாம் வகுப்பு மாணவன், துணிச்சலாக செயல்பட்டு, பஸ்சை நிறுத்தி சக மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் வகுப்புகள் முடிந்த பின், 60க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களது வீடுகளில் இறக்கி விட, பஸ் டிரைவர் கிளம்பினார்.

பஸ் சிறிது துாரம் சென்ற நிலையில், டிரைவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார்.

இதைப் பார்த்த, பஸ்சில் இருந்த டில்லான் ரீவ்ஸ் என்ற ஏழாம் வகுப்பு மாணவன், உடனடியாக, டிரைவர் அருகே வந்து ஓடும் பஸ்சை இயக்கி ஓரமாக நிறுத்தினான். பின், அவசர உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தான். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பஸ்சில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு, வேறொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர். மாணவன் டில்லான் சாதுரியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

துணிச்சலாக செயல்பட்ட அவனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.