தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார். .!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் நண்பராகவும், பிரபல தயாரிப்பாளரகவும் இருந்து வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி. இவர் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு என அஜித் நடிப்பில் மட்டும் மொத்தம் 9 படங்களை தயாரித்திருக்கிறார். இதுமட்டுமின்றி விக்ரமின் காதல் சடுகுடு, சிம்புவின் காளை உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார்.

சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விலங்கு’ வெப் சீரிஸில் காவல் அதிகாரியாகவும் நடித்திருந்தார் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி.  கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்தது. எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.