தற்கொலைக்கு முன்னர் திருமணமான இளம்பெண் எழுதிய கடிதம்..!!

மத்தியபிரதேச மாநிலத்தின் சித்ரகூட் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா சிங்.இவர் மனைவி துவாரகா. நேற்று முன் தினம் தர்மேந்திரா வீட்டில் இருந்து பணி விடயமாக வெளியில் சென்ற போது துவாரகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் துவாரகாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.துவாரகா எழுதி வைத்திருந்த கடிதத்தில், வாழ்க்கையே வெறுத்து விட்டது, பல தேர்வுகளில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை, இனியும் என்னால் வெற்றி பெற முடியாது என்று தோன்றுகிறது என எழுதப்பட்டிருந்தது.விசாரணையில், துவாரகா வேலைக்காக பல தேர்வுகளை எழுதியும் தொடர்ந்து தோல்வியடைந்து வந்திருக்கிறார்.இந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது.

தர்மேந்திரா கூறுகையில், என் மனைவி வேலைக்கு செல்ல விரும்பினார்.பல தேர்வுகளில் வெற்றி பெறாத போதும் நீ, ​​எதிர்காலத்தில் வெற்றி பெறுவாய் என ஊக்குவித்தேன்.ஆனால் இப்படியொரு முடிவை எடுப்பார் என நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.