திண்டுக்கல் மாவட்டம் : ஒட்டன்சத்திரம் அருகே திருட்டு மணல் அள்ளி நகராட்சி கட்டிடப் பணிக்கு வீரப்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நவகானி பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் தேக்கிவைக்கப்பட்டு, பின்பு பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குளத்தில் நீர் இல்லாத நேரத்தில் சமூக விரோதிகள் மணல் அள்ளி விற்பனை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட கனக வாகனங்களை கொண்டு மண் மற்றும் மணலை அள்ளி, நகராட்சி கட்டிடப் பணிகளுக்கு விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குளத்தில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட போர்வெல் மற்றும் மின்மோட்டார் கட்டிடங்களையும் இந்த சமூக விரோதி கும்பல் சேதப்படுத்தி உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.