புலம் பெயர்வை ஊக்குவிப்பதில் அந்தந்த மாநில அரசின் பங்கு என்ன? – சென்னையில் நடந்த ஆலோசனை

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளையுடன் இணைந்து, ‘பாதுகாப்பான புலம் பெயர்வுக்கான வழிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான ஒரு நாள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அரங்கத்தில் இன்று நடந்த இக்கூட்டம் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், நீதியரசர் எஸ்.பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது; தொடக்கவிழாவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் டாக்டர்.கே.விஜயகார்த்திகேயன், வரவேற்புரையும் மற்றும் தமிழ் நாடு வீட்டுதொழிலாளர் நல அறக்கட்டளையின் தலைமை செயல்பாட்டாளர் வளர்மதி இந்த விழாவின் நோக்கத்தையும் விவரித்தார். தமிழ்நாடு

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், நீதியரசர் எஸ்.பாஸ்கரன் அறிமுக உரையும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடக்க உரையும், மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி முக்கிய உரையும் வழங்கினர்.

உரடங்கிற்க்கு பயந்து குருகிராமிலிருந்து புலம் பெயர் தொழிலார்கள் வெளியேற்றம்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் வி.கண்ணதாசன்

ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவை தொடர்ந்து இரண்டு குழு விவாதங்கள் நடைபெற்றன. முதல் குழு விவாதத்தில் லயோலா கல்லூரி LISTAR டாக்டர்,பெர்னார்ட் டி.சாமி, ஆகியோர் முறையே தலைவர் மற்றும் நடுவராக இருந்தனர்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், கிளைச் செயலகத் தலைவர் மற்றும் புலம்பெயர்ந்தோர்

பாதுகாவலர் டாக்டர். M.வெங்கடாசலம், இந்திய,வெளியுறவுப்,பணி, சென்னை மலேசிய தூதரக தொழிலாளர் இணைப்பாளர் டாக்டர்.பாலசுப்ரமணியன் A.தருமராஜா மற்றும் FEFSI தலைவர் (ம) திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, ஆகியோர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இரண்டாவது குழு விவாதத்தில் ஆந்திரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் மந்தட்டா சீதாராம மூர்த்தி, கேரளா மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் K.பைஜுநாத்,

மற்றும் பொதுத் துறை சிறப்பு செயலாளர் வி.கலையரசி ஆகியோர் பாதுகாப்பான புலம் பெயர்வை ஊக்குவிப்பதில் மாநில அரசின் பங்கு பற்றி அவரவர் மாநிலத்தின் மாதிரிகள் பற்றி விவாதித்தார்கள். இதில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் மற்றும் தமிழ்நாடு கூட்டணி நிறுவனர் மற்றும் உறுப்பினர் டாக்டர்.பி. பாலமுருகன் ஆகியோர் முறையே தலைவர் மற்றும் நடுவராக இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.