மக்களே அவதானம்! நாட்டின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனம்


நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

மக்களே அவதானம்! நாட்டின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனம் | Dengue Fever Sri Lanka Treatment

டெங்கு அபாய வலயங்கள்

அத்துடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, கடந்த 26 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களே அவதானம்! நாட்டின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனம் | Dengue Fever Sri Lanka Treatment

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்தில் இன்று முதல் வீடுகளை பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது, டெய்கு நோய் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 29,000இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.