மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்காக…லண்டனுக்கு எடுத்து வரப்பட்ட புனித ஸ்காட்டிஷ் கல்


பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்டார்.

இதையடுத்து மன்னர் 3ம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6ம் திகதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளை உலக தலைவர்கள்,  திரை பிரபலங்கள் என பலர் இந்த முடிசூட்டு விழாவிற்கு வருகை தரவுள்ளனர்.

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்காக…லண்டனுக்கு எடுத்து வரப்பட்ட புனித ஸ்காட்டிஷ் கல் | Stone Of Destiny Moved For King Charles Coronationpool/Getty

இந்த விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸுடன் இணைந்து அவரது மனைவி கமிலாவும் பிரித்தானியாவின் ராணியாக முடிசூட்டிக் கொள்ள இருக்கிறார்.

வரலாற்று சிறப்புமிக்க கல்

இந்நிலையில் முடிசூட்டு விழாவிற்காக ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு வரலாற்று சிறப்புமிக்க “புனித ஸ்காட்டிஷ் கல்” கொண்டு செல்லப்படுகிறது.

இந்த கல் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது ஸ்காட்லாந்தின் எடின்பர்க் கோட்டையில் இருந்து லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-க்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது.

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்காக…லண்டனுக்கு எடுத்து வரப்பட்ட புனித ஸ்காட்டிஷ் கல் | Stone Of Destiny Moved For King Charles CoronationReuters

ஸ்காட்லாந்தின் பண்டைய இறையாண்மை சின்னமாக பார்க்கப்படும் இந்த கல், “விதியின் கல்” என்றும் அழைக்கப்படுகிறது.

முதலாம் எட்வர்ட் மன்னராக இருந்த போது 1926ம் ஆண்டு இந்த கல்லை ஸ்காட்லாந்திடமிருந்து கைப்பற்றினார்.

இந்த கல் கிட்டத்தட்ட 152 கிலோ எடையுள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நிறைவடைந்த பிறகு, புனித கல் மீண்டும் ஸ்காட்லாந்து கோட்டைக்கு திருப்பி கொண்டு செல்லப்படும். 

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்காக…லண்டனுக்கு எடுத்து வரப்பட்ட புனித ஸ்காட்டிஷ் கல் | Stone Of Destiny Moved For King Charles CoronationReuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.