முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்… வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை


மன்னர் சார்லஸ் எதிர்காலம் தொடர்பில் பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ் திகைக்கவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மன்னர் சார்லஸ் கவனம்

பிரேசில் நாட்டை சேர்ந்த வாழும் நாஸ்ட்ராடாமஸ் அதோஸ் சலோமி என்பவர் இதுவரை கணித்துள்ள பெரும்பாலானவை நிகழ்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவார் என்பதும், கத்தார் உலகக் கோப்பையை வெல்லும் அணி முதல், பிரித்தானிய ராணியாரின் மரணம் என பல கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை | Living Nostradamus Charles Reign Prophecy Image: Felipe Assis

தற்போது, மன்னர் சார்லஸ் தமது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என அதோஸ் சலோமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னர் சார்லஸ் கை விரல்கள் வீங்கிப் போயிருப்பது, பல பத்திரிகைகள் படங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தது.

ஆனால், அதைவிட அவரது வேறு உடல் உறுப்புகள் தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே கவலையை தற்போது அதோஸ் சலோமியும் வெளிப்படுத்தியுள்ளார்.

74 வயதான சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் வெளிப்படையாக, மன்னர் சார்லஸின் சிறுநீர் மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும்,

முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை | Living Nostradamus Charles Reign Prophecy @getty

ஓய்வு பெற வேண்டிய கட்டாயம்

அத்துடன் ஆசனவாய், பிறப்புறுப்பிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதோஸ் சலோமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஒருகட்டத்தில் கடுமையான நோய் காரணமாக மன்னர் சார்லஸ் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 அல்லது 2025 காலகட்டத்தில் அவர் ஆட்சியில் நீடிப்பாரா என்பதையும் அவரது உடல் நலனே பதில் கூறும் என்றார்.
அத்துடன், மன்னரின் முடிசூட்டு விழா இன்னும் ஒரு மாதம் தாமதமாக முன்னெடுத்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை | Living Nostradamus Charles Reign Prophecy @getty

மேலும், மன்னர் சார்லஸின் 25ம் வயது முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் அவரது வாழ்க்கையில் அசாதாரணமான ஒன்று நடந்துள்ளது என அதோஸ் சலோமி குறிப்பிட்டுள்ளார்.
2023 அப்படியான ஒரு ஆண்டு, அவர் வாழ்க்கையில் இன்னும் பல விடயங்கள் நடக்க உள்ளன என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.