மேற்குவங்கத்திற்கு இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஹவுரா- பூரி இடையே இந்த ரயில் பயணிக்க உள்ளதை முன்னிட்டு சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை கொல்கத்தாவில் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பூரி வரையில் சோதனை ஓட்டம் நடத்தினர்.
ஹவுரா-ஜல்பைகுரி இடையிலான முதல் வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஓடிசா மாநிலம் பூரி ஜெகனாதர் ஆலயம் செல்லும் யாத்ரீகர்களுக்கு இந்த இரண்டாவது வந்தே பாரத் ரயில் மிகவும் பயன்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.