வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்-சீன மருத்துவமனையில் வரவேற்பாளர் பணியில் இருந்த ‘ரோபோ’வை பெண் ஒருவர் கட்டையால் சரமாரியாக தாக்கி நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், பல்வேறு துறைகளில், ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
இங்கு பெரும்பாலான மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு அனைத்து உடல்நலப் பரிசோதனைகளை செய்யும் பணிகளில் ரோபோக்கள் தான் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், வரவேற்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோவை, பெண் ஒருவர் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதில், அந்த ரோபோ வின் பாகங்கள் உடைந்தன. இதனால், மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்படி, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமணையில், தன்னை கனிவுடன் கவனித்து கேட்க டாக்டர்களோ, நர்சுகளோ இல்லாததால், அந்தப் பெண் அதிருப்தி அடைந்து ரோபோவை அடித்து நொறுக்கினார் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement