வனிதா 3வது திருமண செய்த பீட்டர் பால் காலமானார்
நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்த விஷூவல் எபெக்ட்ஸ் இயக்குனர் பீட்டர் பால் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து அவை தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் கடந்த 2020ல் கொரோனா பிரச்னை தலை தூக்கிய சமயத்தில் விசுவல் எபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார் வனிதா. வனிதா நடத்தி வரும் யுடியூப் தளத்திற்கு விஷூவல் எபெக்ட்ஸ் செய்தார் பீட்டர் பால். அப்போது அவர்களுக்குள் காதல் மலர, கிறிஸ்துவ முறைப்படி எளிய முறையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இந்த விஷயம் சர்ச்சையாக கிளப்பியது.
மற்றொருபுறம் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபத்தை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த பிரச்னைகளுக்கு நடுவே ஓரிரு மாதத்திலேயே பீட்டர் பாலை பிரிந்தார் வனிதா. காரணம் பீட்டர் பால் தினமும் குடித்துவிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அதன்பின் சினிமா, ரியாலிட்டி ஷோ, தனது பிசினஸ் என பிஸியானார் வனிதா.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் சென்னை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பீட்டர் பால் இன்று(ஏப்., 29) காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.