விண்வெளியில் நடந்து யு.ஏ.இ., வீரர் சாதனை| UAE player achievement by walking in space

துபாய்,-விண்வெளியில் நடந்த முதல் ஐக்கிய அரபு எமிரேட்சின் வீரர் என்ற சாதனையை சுல்தான் அல்நெயாடி என்ற விண்வெளி வீரர் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக, விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.

௧௨௦ டிகிரி செல்ஷியஸ்

கடந்த மார்ச் ௨ம் தேதி மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த சுல்தான் அல் நெயாடி உட்பட, ஆறு வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.

விண்வெளியில் தன் இரண்டு மாத பயணத்தை முடிக்க உள்ள நிலையில், சுல்தான் அல் நெயாடி, சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அந்த மையத்துக்கு வெளியே சென்று சில பராமரிப்பு பணிகளை செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார்.

அவருடன், நாசாவின் இன்ஜினியர் ஸ்டீபன் போவனும் இணைந்தார்.

இருவரும், சர்வதேச மையத்துக்கு வெளியே, விண்வெளியில் நடந்து சென்று, இந்த பராமரிப்பு பணிகளை முடித்துஉள்ளனர்.

இதன் வாயிலாக விண்வெளியில் நடந்த முதல் யு.ஏ.இ., வீரர் என்ற பெருமையை சுல்தான் பெற்றுள்ளார்.

விண்வெளி மையத்துக்கு வெளியே, சாதாரணமாக, ௧௨௦ டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும்.

மேலும் ஈர்ப்பு விசை கிடையாது என்பதால், சிறப்பு உடை அணிய வேண்டும். இந்த உடை அணிவதற்கு மட்டும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகும்.

latest tamil news

பராமரிப்பு பணி

அதற்கு முன், உடலில் இருந்து நைட்ரஜன் வாயு வெளியேற்றப்பட்டு, அதிக ஆக்சிஜன் செலுத்தப்படும்.

மிகக் கடுமையான பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இதுபோன்று விண்வெளியில் நடக்க முடியும். விண்வெளியில், ஏழு மணி ஒரு நிமிடங்கள் இருந்த சுல்தான் மற்றும் போவென், திட்டமிட்டபடி, பராமரிப்பு பணிகளை முடித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.