விருதுநகர் மாவட்டத்தில் அரசு கல்லூரி கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தலில் அரசு கல்லூரி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு கோடை விடுமுறை காரணமாக கல்லூரி கட்டுமான பணிக்கு பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஹரிஷ்குமார்(15), ரவிச்செல்வம்(17) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தொழிலாளர் நலத்துறை விசாரணைக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறையினர் விசாரணை மேற்கொண்டு, அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.