இலங்கை கடற்படையினரும் மன்னார் பொலிஸாரும் இணைந்து 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை சிலாவத்துறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 893 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் உட்பட சட்டவிரோத கடத்தலை எதிர்த்து கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் இணைந்து 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை சிலாவத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது ஒருவரை அவதானித்து விசாரணை நடத்தியது. அப்போது குறித்த சந்தேகத்திற்கிடமான நபர் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த 893 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் பார்சலொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருள் தொகையின் மதிப்பிடப்பட்ட வீதிப் பெறுமதி சுமார் எட்டு இலட்சம் (08) ரூபா என நம்பப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த இருபத்தி நான்கு (24) வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சுமார் 893 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.