கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்பொழுது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை செய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழையும், மே 1ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.