சென்னை : பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் சீதா கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
ராமாயணக் கதையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஓம் ராவத்
ஆதிபுருஷ் : பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ,ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்றுத்தராததால், அடுத்த ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பிரபாஸ். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார்.
3டி தொழில்நுட்பம் : ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

ஜூன் 16ந் தேதி ரிலீஸ் : ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தைப் பார்ப்பது போல இருக்கிறது என்று கண்டபடி விமர்சித்ததால், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்தது. ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கும் சீதை : இந்நிலையில், நடிகை கிருத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில், கிருத்தி சனோன் ஆன்மீக பக்தி உலகிற்கு அழைத்துச் செல்கிறார். 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியில் அரசராக இருந்த ராமர், இலங்கை சென்று அனுமன் உதவியோடு கடத்தப்பட்டு வைத்து இருந்த தனது மனைவி சீதாவை மீட்டுக் கொண்டு வந்த கதையே ஆதிபுருஷ் என்ற பெயரில் உருவாகி உள்ளது.
PRABHAS – KRITI SANON – ‘ADIPURUSH’: NEW POSTERS ARRIVE… On the auspicious occasion of #SitaNavmi, Team #Adipurush launches the #MotionPoster featuring #KritiSanon… Stars #Prabhas… Directed by #OmRaut. pic.twitter.com/QRj0B7SDsf
— taran adarsh (@taran_adarsh) April 29, 2023