சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலாவும் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மியின் வீடியோ ஒன்றை சோபிதா துலிபாலா லீக் செய்த நிலையில், ஐஸ்வர்யா லக்ஷ்மி அப்செட் ஆகி உள்ளார்.
சேந்தன் அமுதனுக்கு இயக்குநர் மணிரத்னம் ஒரு பக்கம் மோசம் செய்த நிலையில், இன்னொரு பக்கம் பூங்குழலி கதாபாத்திரத்தையும் டீலில் விட்டு விட்டார்.
அருள்மொழி வர்மனின் ஆசைக் காதலியான பூங்குழலியின் காட்சிகள் பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெறவே இல்லை.
ரகசிய போட்டோக்களை ஷேர் செய்த வானதி: பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2ல் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலா கடைசி நாள் ஷூட்டிங்கில் காரவனில் தானும் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மியும் ரகசியமாக பண்ண சேட்டைகளின் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்து இன்னமும் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு தன்னால் முடிந்த ப்ரமோஷனை செய்து வருகிறார்.
கவர்ச்சி உடையில் பூங்குழலி ஆட்டம்: பொன்னியின் செல்வன் படத்திலேயே சாரா அர்ஜுன் மற்றும் பூங்குழலிக்குத் தான் செம கவர்ச்சியான உடை கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த உடையுடன் கேரவனில் இருவரும் ஆட்டம் போட்டும் கையை துப்பாக்கி போல வைத்துக் கொண்டு செம சேட்டையாக போஸ் கொடுத்ததையும் வானதி பூங்குழலியின் அனுமதி இல்லாமல் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து விட்டார்.
அந்த போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் காதலிகள் இருவரும் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்கின்றனர் பாருங்கள் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், அந்த போஸ்ட்டை ஐஸ்வர்யா லக்ஷ்மியும் பார்த்து விட்டார்.
அப்செட்டான ஐஸ்வர்யா லக்ஷ்மி: பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு ரசிகர்களை தனது அழகாலும் கவர்ச்சியாலும் அதிகம் கவர்ந்தவர் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி. ஆனால், முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு இரண்டாவது பாகத்தில் இவருக்கான ஸ்கோப் இல்லை.
இந்நிலையில், இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பப்ளிக்காக சோபிதா ஷேர் செய்த நிலையில், இதை நீ பப்ளிக்கா போஸ்ட் பண்ணியிருக்கக் கூடாது என்றே கமெண்ட் போட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.
“Nooooooooooooooo! This was not supposed to go public” என கோபமான எமோஜிக்களுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி போட்ட கமெண்ட்டுக்கு கீழ் ரொம்ப அழகா இருக்கீங்க இந்த வீடியோவில் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஐஸ் வைத்து வருகின்றனர்.