சென்னை : குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக சிறப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த வாரமும் ஏராளமான பஃன் டாஸ்க்குகள் மற்றும் கோமாளிகளின் கோமாளித்தனங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் குக்குகள், கோமாளிகள் மட்டுமில்லாமல் நடுவர்களும் இணைந்து ரசிகர்களை கவரும் பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
ஆன்டியை எருமை என்று கலாய்த்த ஜிபி முத்து : விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3 சீசன்களை சிறப்பாக முடித்துள்ளது. தற்போது 4வது சீசனை நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன், ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று தோன்றும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விஜே விஷால் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எலிமினேஷன் ரவுண்ட் இந்த நிகழ்ச்சியில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் நடிகை ஷெரின் எலிமினேட் ஆனார். இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்ட் சுற்று நடைபெற்று, ஏற்கனவே வெளியேறிய குக்குகள் மற்றும் புதிதாக சிலரும் இணைந்துள்ளனர். அந்த வகையில் ஆர்ட் டைரக்டர் கிரண் தற்போது நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இவருடன் நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ்ஷும் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்த சீசனில் ஷிவாங்கி குக்காக களமிறங்கி பட்டையை கிளப்பி வருகிறார். அதேபோல அவர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் இருந்து தப்பித்தும் வருவதை பார்க்கும் ரசிகர்கள், இந்த சீசனின் டைட்டில் வின்னர் அவர்தான் என்று அடித்துக் கூறுகின்றனர். அதற்கேற்றாற்போல, தண்ணீர் வைக்கக்கூட தெரியாது என்று கடந்த சீசன்களில் கூறிவந்த ஷிவாங்கி, தற்போது கேரளா உள்ளிட்ட பலதரப்பட்ட டிஷ்களை சமைத்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த வாரமும் பல சிறப்பான பஃன் விஷயங்களை நிகழ்ச்சியில் காண முடிகிறது. நிகழ்ச்சியில் ஆன்ட்ரின் நௌரிகட், கிரண் உள்ளிட்டவர்கள் மும்முரமாக குக்கிங்கை செய்துவரும் நிலையில், இடையில் மற்றவர்களிடம் பேசும் ஜிபி முத்து சமைக்கத் தேவை பொறுமை, ஆன்டி ஒரு எருமை என்று கூறுகிறார். இதைக்கேட்ட நடுவர் செப் தாமு, அதை அப்படியே, ஆன்டியிடம் போட்டுக் கொடுக்கிறார். இதையடுத்து அவரை ஒட ஓட விரட்டி அடிக்கிறார் ஆன்டி.
இந்த வாரம் சிறிய அளவிலான அம்மி கொடுக்கப்பட்ட நிலையில், அதில் வேர்க்கடலை சட்னி செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் புகழ் மற்றும் கிரண் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதைதொடர்ந்து இந்த சட்னி சேலஞ்சில் சிறப்பாக செயல்பட்டு, மைம்கோபி -தங்கதுரை, ஷிவாங்கி -ஜிபி முத்து, கிரண் -புகழ் ஆகியோர் அடுத்த சுற்றிற்கு தேர்வாகினர். இவ்வாறு இன்றைய எபிசோட்டின் பிரமோ காணப்பட்டது.