சென்னை : நடிகை கோவை சரளாவை தமிழில் இருந்து காலி செய்ததே வடிவேலு தான் என்று பிரபலம் ஒருவர் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளர்.
தமிழ் சினிமாவில் ஏறத்தாழ நான்கு தசாப்தங்களைக் கடந்து நடித்து வரும் கோவை சரளா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பொருந்தி நடிப்பார்.
தனது 17 வது வயதிலேயே தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்ட கோவை சரளா,முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள் படங்களில் சற்று வயது அதிகமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
பொம்பள கமல் : நடிகை கோவை சரளா குறித்து பல சுவாரசியமான தகவல்களை பேட்டி ஒன்றில் சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசி உள்ளார். அதில், மனோரம்மா ஆட்சி எப்படி ஒரு பொம்பள சிவாஜி என்று அனைவராலும் பாராட்ட பட்டாரோ அப்படி கோவை சரளாவை பொம்பள கமல்ஹாசன் என்று சொல்லலாம். அவரிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சும்மா மிரட்டி விடுவார். கோவை சரளா இளம் வயதில் மேடை நாடகத்தில் பேசியதைப் பார்த்து வியந்து போன எம்ஜிஆர் அவரை வெகுவாகபாராட்டினார்.
படவாய்ப்பு குவிந்தது : இதே போல, கே பாக்யராஜ் கோவை சரளாவின் மேடை நாடகத்தை பார்த்துவிட்டு முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம்100 நாளுக்கு மேல் பட்டிதொட்டி எங்கும் ஓடி வசூலை அள்ளுகிறது. அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு தான் பாக்யராஜ் கோவை சரளா என்ற பெயரை அவருக்கு வைத்தார். அதன்பிறகு ஜப்பானின் கல்யாண ராமன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகுதான் இவருக்கு படவாய்ப்பு குவிந்தன.
வளர்ச்சியை பிடிக்காத வடிவேலு : அதன்பிறகு வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர்கள் இருவரும் திரையில் வந்தாலே திரையரங்கில் கைத்தட்டல் அள்ளும். ஆனால், வடிவேலுக்கு கோவை சரளா தன்னைவிட வளர்வது பிடிக்காதால், அதன் பிறகு அவர்கள இணைந்து நடிக்கவில்லை. வடிவேலுவிற்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு அது என்னவென்றால், தன்னை விட யாரும் பெயர் எடுத்துவிடக்கூடாது அப்படி பெயர் எடுத்துவிட்டால் அதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
படவாய்ப்பே இல்லை : ஆனால், ஒரு கட்டத்தில் கோவை சரளாவால் தான் வடிவேலுக்கு படவாய்ப்பு வருகிறது என்ற பேச்சு பரவியதை வடிவேலுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், தனது படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை விலக்கினார். யாராவது கோவை சரளாவுடன் தான் சேர்த்து நடிக்க வேண்டும் என்று கேட்டால், நான் சேர்ந்து நடிக்க மாட்டான் என்றும், தன் தனியாக நடித்தாலே பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பல இயக்குநர்களிடம் கூறியிருக்கிறார் வடிவேலு. இதனால், ஒரு கட்டத்தில் கோவை சரளாவுக்கு படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
வாழ்க்கையை தியாகம் செய்தார் : நடிகை கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை, ஆனால், அவரை நம்பி அண்ணன் குடும்பம், தம்பி குடும்பம் உள்ளது. அவர்களின் குழந்தைகளை இவர்தான் படிப்புக்க வைத்து திருமணம் செய்து வைத்து அழகுபார்த்தார். தனது குடும்பத்திற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் கோவை சரளா. இவரின் வருமானத்தை நம்பித்தான் மொத்தக்குடும்பமும் இருந்ததால், இவருக்கு நடிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இதையடுத்து தெலுங்கிற்கு சென்று அங்கு பட்டையை கிளப்பினார். தற்போது தமிழ் , தெலுங்கு என இரண்டிலும் நடித்து வருகிறார்.