‘மேட் இன் இந்தியா’ நிறுவனங்களில் லாவா நிறுவனம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த ஆண்டு நிறுவனம் பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில், அடுத்ததாக இந்த ஆண்டு நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. லாவா நிறுவனம் மிக விரைவில் அக்னி 2 5ஜி (AGNI 2 5G) போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன் நிறுவனம் மற்றொரு பட்ஜெட் 5ஜி போனை சந்தையில் கொண்டு வருகிறது. அதற்கு லாவா ப்ளேஸ் 1எக்ஸ் 5ஜி (Lava Blaze 1X 5G) என்று பெயரிடப்படும்.
Lava Blaze 1X 5G ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த போனின் அதிகாரப்பூர்வ அறிமுகம் அடுத்த வாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, சாதனத்தின் அனைத்து விவரக்குறிப்புகளையும் லாவா பிராண்ட் ஏற்கனவே அதன் இணையதளத்தில் வெளிப்படுத்தியுள்ளது. Lava Blaze 1X 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Lava Blaze 1X 5G: அம்சங்கள்
Lava Blaze 1X 5G நேர்த்தியான விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லேண்டிங் பேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரக்குறிப்புகளில் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் MediaTek Dimensity 700 SoC ஆகியவை அடங்கும். இருப்பினும், Lava Blaze 1X 5G ஆனது 6ஜிபி வரையிலான பிசிக்கல் ரேம் மற்றும் 5ஜிபி வரையிலான வர்சுவல் ரேம் ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்படும்.
Lava Blaze 1X 5G: விவரக்குறிப்புகள்
Lava Blaze 1X 5G ஸ்மார்ட்போனில் 1600 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் 2.5D வளைந்த திரையும் (கர்வ்ட் ஸ்க்ரீன்) இருக்கும். ஃபோன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 700 7என்எம் செயலி மற்றும் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை விரிவாக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது.
Lava Blaze 1X 5G: கேமரா & பேட்டரி
Lava Blaze 1X 5G ஸ்மார்ட்போன், 50எம்பி பின்புற கேமரா, VGA டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், டூயல் 4ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆகியவை இந்த போனின் மற்ற அம்சங்களாகும். இந்த மொபைல் போன் 15W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Lava Blaze 1X 5G: இந்தியாவில் இதன் விலை என்ன?
Lava Blaze 1X 5G இரண்டு வண்ணங்களில் (க்ளாஸ் ப்ளூ மற்றும் க்ளாஸ் க்ரீன்) வரும். ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.12,000 இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.