தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பல படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாயிலாக வெளியிட்டவர்
உதயநிதி ஸ்டாலின்
. இவர் அமைச்சராக பதவியேற்ற பின்பு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவரின் கடைசி படமாக ‘மாமன்னன்’ உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள உதயநிதி நடிப்பில் அண்மையில் ‘கண்ணை நம்பாதே’ படம் வெளியானது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு. மாறன் இயக்கத்தில் சமீபத்தில் இந்தப்படம் ரிலீசானது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளியாகி வரவேற்பை பெற்றது ‘கண்ணை நம்பாதே’ படம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனிடையில் உதயநிதி நடிப்பில் ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். அத்துடன் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி ஆகியுள்ள வைகைப்புயல் வடிவேலுவும் இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் இந்தப்படத்தில் அழுத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல்.. முதல் பாகத்தின் கலெக்ஷன் சாதனையை முறியடித்ததா.?
அத்துடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். தனது படங்களின் வாயிலாக சமூக அவலங்கள் குறித்து பேசும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ‘மாமன்னன்’ படத்தின் வெறித்தனமான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி உதயநிதி கோர்ட் ஷுட்டுடன் ஒருபக்கம் நிற்பதை போன்றும், வேஷ்டி சட்டையுடன் அரசியல்வாதி ஒருவர் மற்றொரு பக்கம் நிற்பதை போன்றும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன் ‘மாமன்னன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 1 ஆம் தேதி வெளியாகும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உதயநிதியின் கடைசி படம் என்பதால் ‘மாமன்னன்’ படத்தின் மீது ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
AK 62: ‘ஏகே 62’ அறிவிப்பு வந்தாச்சு.. காத்திருப்புக்கு கிடைச்ச வேறலெவல் ட்ரீட்.!