ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்த பிறகு நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பேசியது வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன்அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக படமாக எடுத்திருந்தார் இயக்குநர் மணிரத்னம். இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன் பெரும் பொருட் செலவில் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், பிரபு, ரஹ்மான், ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா துலிபாலா என பலர் நடித்துள்ளனர். Nayanthara: ஓவியம் போல் இருக்கும் நயன்தாரா… க்யூட் போட்டோஸ்!
பொன்னியின் செல்வன் 2இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள், முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்ததாக தெரிவித்து வருகின்றனர்.
Samantha: சேலையில் சிதறவிட்ட சமந்தா… பர்த்டே ஸ்பெஷல்!
திருவிழாபடத்தின் ரிலீஸை முன்னிட்டு திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. திரையரங்க வாயில்களில் பல அடி உயரத்துக்கு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் பலரும் திரையரங்குகளில் ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர். அந்த வகையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள காசி திரையரங்கில் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் பெரிய அளவிலான கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்தனர்.
Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 படத்தின் ‘ஷோ ஸ்டீலர்’ இவங்கதான்!
சந்தோஷம்நான்கு குதிரைகள் சூழ ஜெண்ட மேள வாத்தியங்களுடன் காலை 9 மணிக்கு வெளியான திரைப்படத்தை பார்க்க நடிகர் கார்த்தி தியேட்டருக்கு வருகை புரிந்தார். மேலும் முழு திரைப்படத்தையும் ரசிகர்களுடன் திரையரங்கில் உட்கார்ந்து பார்த்தார் நடிகர் கார்த்தி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோருடனும் அமர்ந்து படத்தைப் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறினார். இனிமே த்ரிஷாவ மிஸ் பண்ணுவோம் : ரசிகர்கள்!
பேச முடியவில்லைபொன்னியின் செல்வன் படம் காலம் காலத்திற்கு நிற்கின்ற ஒரு படம் அதில் நாமும் பணியாற்றி உள்ளோம் என்பது பெருமையாக இருக்கிறது என்றும் கூறினார் நடிகர் கார்த்தி. மேலும் படம் பார்த்து முடிந்த பிறகும் கூட அந்த உணர்வு இன்னும் போகவில்லை என்றும் அதனால் சரியாக பேசக்கூட முடியவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார் நடிகர் கார்த்தி. பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி வந்திய தேவனாக நடித்துள்ளார். Ponniyin Selvan 2: இது என்ன சோழர்களுக்கு வந்த சோதனை… இணையத்தில் லீக்கான பொன்னியின் செல்வன் 2!
Karthi