Ponniyin Selvan 2: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்… பொன்னியின் செல்வன் 2 வெற்றிக்கான காரணங்கள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் படத்திற்கான வெற்றி குறித்த காரணங்கள் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மைய்யப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக பெரும் பொருட் செல்வில் இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன் திரைப்படம்.​ Jyothika: 44 வயசுல இப்படியா… ஜோதிகா ஷேர் செய்த ஒத்த வீடியோ… பிரமித்து போன பிரபலங்கள்!​
மாஸ்டர் பீஸ்முதல் பாகம் வெளியான போதே பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரசிகர்கள் மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் என வர்ணித்தனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் டிவிஸ்ட்டுகளோடு நிறைவடைந்ததால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. உலகம் முழுவதும் 3000 ஸ்க்ரீன்களில் இப்படம் வெளியானது.​ SS Chakravarthy death: பிரபல அஜித் படங்களின் தயாரிப்பாளர் திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!​
காட்சி விருந்துஇதனை பார்த்த ரசிகர்கள், பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க மணிரத்னத்தால் மட்டும்தான் முடியும் என கூறி வந்தனர். படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதாகவும், இது இயக்குநர் மணிரத்னத்தால் மட்டும்தான் சாத்தியம் என்றும் கூறி வருகின்றனர். தனது கனவு படமான பொன்னியின் செல்வனை நினைத்தப்படியே ரசிகர்களுக்கு காட்சி விருந்தாக கொடுத்திருக்கிறார் மணிரத்னம் என்றும் பாராட்டி வருகின்றனர்.​ https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/nayanthara-looks-like-an-art/photoshow/99858853.cms​
வெற்றிக்கான காரணம்இந்நிலையில் படத்தின் வெற்றிக்கு சரியான அளவு காட்சியமைப்புகள், பாடல்கள், பின்னணி இசை, கலை இயக்கம் மற்றும் செட் ஆகியவை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. படத்தின் கதை பரவலாக அறியப்பட்டாலும், அதற்கு பொருத்தமான முகத்தை கொடுத்தது படத்தின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சோழ வம்சத்தினருக்கு இடையேயான போர் சதி உட்பட பல முக்கியமான காட்சிகள் உள்ளன.​ Ponniyin Selvan 2: சரியா பேச்சுக்கூட வரல… பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த கார்த்தி உருக்கம்!​
உண்மையான கதைஇளவரசர் அருண்மொழி வர்மனுக்கு முடிசூடுவது முதல் நந்தினி தனது இழந்த காதலான ஆதித்த கரிகாலனை சந்திப்பது வரை, படத்தின் இரண்டாம் பாகம் உண்மையான கதையைக் கொண்டுள்ளதும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.
‘பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகம் இருந்தபோதிலும், படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களின் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
​ PS 2 Trisha: நானும் ஐஸ்வர்யாவும் விக்ரமை தூங்க விடமாட்டோம்… அவர் கத்துவார்… உருக்கமாக பேசிய த்ரிஷா!​
ரொமான்ஸ் காட்சிகள்உதாரணமாக, முதல் பாகத்தில் வந்தியத்தேவனின் பாத்திரம் விளையாட்டுத்தனமாகவும், குந்தவை மற்றும் நந்தினியுடன் ஜாலியான காட்சிகளைக் கொண்டிருந்தது. ஆனால் 2 ஆம் பாகத்தில் அவர்கள் சந்திக்கும் போது, வந்தியத்தேவன் கதாபாத்திரம் என்ன செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தனது கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருந்த மணிரத்னம் ஸ்டைல் காதல் காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.PS2 Review: பிளாக் பஸ்டர் ஹிட் கேரண்டி… பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு குவியும் பாஸிட்டிவ் விமர்சனம்!​
Ponniyin Selvan 2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.