PS 2: 'பொன்னியின் செல்வன் 2' படத்தை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை: கடுப்பான ரசிகர்கள்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘பொன்னியின் செல்வன்’ பட இரண்டாம் பாகம் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவில் எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபலமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சிகளில் பலரும் இறங்கினர். பலரின் அந்த கனவை தற்போது இயக்குனர் மணிரத்னம் நனவாக்கியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, ஆழ்வார்க்கடியானாக ஜெயராம், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ரகுமான், லால், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்றது. வசூலிலும் இந்தப்படம் மாஸ் காட்டியது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் வெளியாகியுள்ளது.

Kushboo Daughter: நடிகை குஷ்புவின் மகளா இவர்..?: தீயாய் பரவும் போட்டோஸ்..!

இந்நிலையில் இந்தப்படத்திற்கு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பல தியேட்டர்ல இந்தப்படம் காத்து வாங்கிட்டு இருக்கு. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் கொடுத்த எதிர்பார்ப்பை படம் எங்கயுமே கொடுக்கல. படம் முழுக்க எங்கையும் பிரம்மிக்க வைக்குற மாதிரி எந்த சீனும் இல்லை. பார்ட் 1 ரிலீஸ் ஆனப்பவே பலர் முட்டு கொடுத்தாங்க. அதே மாதிரி இந்த பாகத்துக்கும் வந்தும் முட்டு கொடுப்பாங்க. அதை நம்பி ஏமாந்துடாதீங்க. படத்துல இருக்குற மிகப்பெரிய பிரச்சனையே செயற்கைத்தனம் தான். படத்துல வந்த யாருமே கேரக்டராவே தெரியலை.

மொத்தத்துல ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படிச்சுட்டு முதல் பாகத்தை பார்த்த எல்லாரும் கெட்ட கோபத்துல இருக்கான். இப்போ இரண்டாவது பார்ட்டையும் பார்த்தா ரொம்பவே உக்கிரமா ஆகிருவான். புக் படிக்காதவன் பார்த்தா, இதெல்லாம் ஒரு கதையான்னு கேட்டுட்டு போவான் என பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார் மாறன். அவரின் இந்த விமர்சனத்திற்கு கீழ் ரசிகர்கள் பலரும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு சப்போர்ட் செய்தும் மாறனை கழுவி ஊற்றியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

PS 2: வெற்றிக்கொடி நாட்டினார்களா சோழர்கள்.?: ‘பொன்னியின் செல்வன் 2’ ட்விட்டர் விமர்சனம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.