சென்னை : வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் வாணிபோஜனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
மாடல் அழகியான வாணி போஜன் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், விமானப் பணி பெண் வேலையை விட்டு சின்னத்திரையில் வாய்ப்பு தேடி அலைந்தார்.
இதையடுத்து, சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனதை கவர்ந்தார்.
வாணி போஜன் : இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த வாணி போஜனுக்கு அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரியான வாணி போஜன், ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். அதன்பின் விக்ரமுடன் மகான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டன.
கைவசம் உள்ள படங்கள் : வாணி போஜன் தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், பூமர் அங்கிள் உள்பட பல படங்கள் இவரது கைவசம் வைத்திருந்தார். மேலும், அன்பு, ஊர் குருவி, ரேக்லா, ஆரியன், ஜெய்யுடன் இணைந்து ஒரு படம் என பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அருண்விஜய்யுடன் இணைந்து இவர் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து பல வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
செங்களம் வெப் தொடர் : எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன்,கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர் ஆகியோர் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான செங்களம் வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் பெயருக்கு ஏற்றார் போல,சிவப்பு களமாகவே இருந்தது. அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில் உருவான இந்த தொடர் வரவேற்பை பெற்றது.
லேட்டஸ்ட் போட்டோ : படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணிபோஜன் விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே ரதியே ரதியே என வாணி போஜனின் லேட்டஸ்ட் லுக்கைப் பார்த்து கவிதைப்பாடி வருகின்றனர்.