பொன்னியின் செல்வன் – 2 (தமிழ்)
1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல் ‘பொன்னியின் செல்வன்’. இந்த நாவல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்று அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த வருடம் (செப்டம்பர் 30ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Agent (தெலுங்கு)
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தில் அகில் அக்கினேனி, மம்மூட்டி, சாக்ஷி வைத்யா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (ஏப்ரல் 29ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Pachuvum Athbhutha Vilakkum (மலையாளம்)
அகில் சத்யன் இயக்கத்தில் பகத் பாசில், மோகன் ஆகாஷே, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழி திரைப்படம் ‘Pachuvum Athbhutha Vilakkum’. இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 29ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Song of Scorpions (இந்தி)
அனுப் சிங் இயக்கத்தில் ஹாலிவுட் நடிகையான கோல்ஷிஃப்தே ஃபராஹானி, இர்ஃபான் கான், வஹீதா ரஹ்மான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘The Song of Scorpions’. மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் கடைசிப் படமான இது, நேற்று (ஏப்ரல் 29ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Polite Society (English)
நிதா மஞ்சூர் இயக்கத்தில் பிரியா கன்சாரா, ரிது ஆர்யா, ரேணு பிரிண்டில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் ‘Polite Society’. இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 29ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Sisu (Finnish)
ஜல்மாரி ஹெலண்டர் இயக்கத்தில் ஜோர்மா டோமிலா, அக்செல் ஹென்னி, ஜாக் டூலன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பின்லாந்து மொழித் திரைப்படம் ‘Sisu’. ஆக்ஷன் த்ரில்லரான இத்திரைப்படம் ஆங்கிலத்தில் நேற்று (ஏப்ரல் 29ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படைப்புகள்
Save the Tigers (தெலுங்கு) – Disney Plus Hotstar
பிரதீப் அத்வைதம், மஹி வி ராகவ் இயக்கத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா, ஹர்ஷவர்தன், பவானி கங்கிரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி வெப்சீரிஸ் ‘Save the Tigers’. இந்த வெப்சீரிஸ் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Sweet Tooth Season 2 (ஆங்கிலம்) – Netflix
ஜிம் மிக்கிளின் ஆக்கத்தில் DC Vertigo காமிக்ஸ் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்த வெப்சிரீஸில் நோன்சோ அனோசி, கிறிஸ்டியன் கான்வரி, அடீல் அக்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் ஏப்ரல் 27ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Nurse (ஆங்கிலம்) – Netflix
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கேஸ்பர் பார்ஃபோய்ட்டின் ஆக்கத்தில் உருவாகியிருக்கும் த்ரில்லர் வெப்சீரிஸ் ‘தி நர்ஸ்’. ஏற்கெனவே இந்தச் சம்பவத்தை மையப்படுத்தியே ‘தி குட் நர்ஸ்’ என்ற படத்தை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது ஃபேன்னி லூயிஸ் பெர்ந்த், ஜோசப்பின் பார்க் ஆகியோர் நடிப்பில் அதே கதையை வெப்சீரிஸாகவும் மாற்றியுள்ளது. இது கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகியுள்ளது.
Vyavastha (தெலுங்கு) – Netflix
ஹீபா பட்டேல், சம்பத் ராஜ், கார்த்திக் ரத்னம் நடிப்பில் உருவாகியுள்ள கோர்ட் ரூம் டிராமா வெப்சீரிஸ்தான் இந்த ‘வியாவஸ்தா’. எட்டு எபிசோடுகள் கொண்ட தெலுங்கு மொழி வெப்சீரிஸான இது Zee5 ஓடிடி தளத்தில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகியுள்ளது.
Los pacientes del doctor García (ஸ்பேனிஷ்) – Netflix
ஜேவியர் ரே, தாமர் நோவாஸ், வெரோனிகா எச்செகுய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Los pacientes del doctor García’. இந்த வெப்சீரிஸ் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Citadel (ஆங்கிலம்) – Amazon Prime Video
ஜோஷ் அப்பல்பாம், பிரையன் ஓ, டேவிட் வீல் ஆகியோரின் ஆக்கத்தில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Citadel’. இந்த வெப்சீரிஸின் முதல் இரண்டு எபிசோடுகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வெள்ளியன்றும் அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாகும்.
U Turn (இந்தி) – Zee5
ஆரிப் கான் இயக்கத்தில் மனு ரிஷி சாதா, ஸ்ரீதர் துபே, அலயா எஃப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘U Turn’. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Peter Pan & Wendy (ஆங்கிலம்) – Disney Plus Hotstar
டேவிட் லோவரி இயக்கத்தில் அலெக்சாண்டர் மோலோனி, எவர் ஆண்டர்சன், ஜூட் லா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பேன்டஸி திரைப்படம் ‘Peter Pan & Wendy’. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Matchmaker (அரபிக்) – Netflix
அப்துல்மோசன் அல்தபான் இயக்கத்தில் ஹுசம் அல்ஹர்தி, ரீம் அல்ஹபீப், நூர் அல்காத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Matchmaker’. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
AKA (பிரெஞ்சு) – Netflix
மோர்கன் எஸ். டாலிபர்ட் இயக்கத்தில் Alban Lenoir, Eric Cantona, Thibault de Montalembert உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘AKA’. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
பத்து தல (தமிழ்) – Amazon Prime Video
ஒபேலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட்டான ‘மஃப்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இப்படம் தற்போது ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.
தசரா – Netflix
ஸ்ரீகாந்த் ஓதெலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Thuramukham (Malayalam) – SonyLiv
ராஜீவ் ரவி இயக்கத்தில் நிவின் பாலி, இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் அசோகன், சுதேவ் நாயர், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, செந்தில் கிருஷ்ணா, நிமிஷா சஜயன், பூர்ணிமா இந்திரஜித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Thuramukham’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இப்படம் தற்போது ‘SonyLiv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Pakalum Paathiravum (மலையாளம்) – Zee5
அஜய் வாசுதேவ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ரஜிஷா விஜயன், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழி திரைப்படம் ‘Pakalum Paathiravum’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.