அகில் அக்கினேனியை இயக்கும் விஜய் பட இயக்குனர்!
நடிகர் அகில் அக்கினேனி தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் மற்றும் இவர் நடிகர் நாகார்ஜூனா – நடிகை அமலா தம்பதியின் இளைய மகன் ஆவார். இவரது நடிப்பில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் ஏஜென்ட். இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் தோல்வி ஆகி வருவதால் தனது ரூட்டை மாற்றி தற்போது தோழா, வாரிசு பட இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.