அதிரடியாக 180 ஓட்டங்கள் விளாசிய வீரர்! படைத்த மிரட்டலான சாதனைகள்



பாகிஸ்தான் வீரர் ஃபஹ்கர் ஜமான் நியூசிலாந்துக்கு எதிராக 180 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் சில சாதனைகள் படைத்தார்.

அதிரடி துரத்தல்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 337 ஓட்டங்கள் இலக்கை பாகிஸ்தான் அணி 48.2 ஓவரிலேயே எட்டியது.

தொடக்க வீரர் ஃபஹ்கர் ஜமான் 144 பந்துகளில் 180 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர், 17 பவுண்டரிகள் அடங்கும்.

ஃபஹ்கர் ஜமான் சாதனை

இந்த சதத்தின் மூலம் அவர் சில சாதனைகள் படைத்தார். அதாவது, தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் சதங்கள் விளாசிய 4வது பாகிஸ்தான் வீரர் ஃபஹ்கர் ஜமான் ஆவார்.

மேலும், அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஃபஹ்கர் ஜமான் 67 போட்டிகளில் 3082 ஓட்டங்கள் குவித்துளார். இதில் 10 சதங்கள், 15 அரை சதங்கள் அடங்கும். 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.