லொட்டரியில் 105 மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர் ஒருவர் தமக்கு அந்த பழைய வாழ்க்கை வேண்டும் என தற்போது ஆசைப்படுவதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
யூரோ மில்லியன் ஜாக்பாட்
மேற்கு சசெக்ஸ் பகுதியை சேர்ந்த ஸ்டீவ் தாம்சன் என்பவர் 2019ல் யூரோ மில்லியன் ஜாக்பாட்டை வென்றார்.
அதுவரை கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த ஸ்டீவ் தாம்சன் லொட்டரியில் 105 மில்லியன் பவுண்டுகள் வென்றதன் பின்னரும் சிறிதளவும் மாறவில்லை என்றே அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
Image: Steve Reigate
தற்போது தமக்கு அந்த பழைய வாழ்க்கை திரும்ப வேண்டும் என அவர் ஆசைப்படுவதாகவும் அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
யூரோ மில்லியன் ஜாக்பாட்டை வென்றதன் பின்னர் ஸ்டீவ் தாம்சன் பெரும்பாலான நாட்கள் தமது நாயுடன் நடக்க செல்வார் அல்லது 4.5 மில்லியன் பவுண்டுகள் தொகையில் வாங்கப்பட்ட தமது குடியிருப்பில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவார் என்றே கூறுகின்றனர்.
ஸ்டீவ் முதலில் மேற்கு சசெக்ஸின் செல்சியில் ஜன்னல்கள் மற்றும் கன்சர்வேட்டரிகளை விற்கும் வணிகத்தை கொண்டிருந்தார்.
ஆனால் லொட்டரியில் வெற்றி பெற்ற பின்னர் அவர் தனது தொழிலை உடனடியாக கைவிடவில்லை.
பழைய வாழ்க்கைக்கு திரும்ப ஆசை
மாறாக தனது வாடிக்கையாளர்களுக்கான நிலுவையில் உள்ள ஆர்டர்களை நிறைவு செய்வதில் முனைப்பு காட்டினார்.
மட்டுமின்றி, தமது பிள்ளைகள் இருவர் படிக்கும் பாடசாலைக்கு 50,000 பவுண்டுகள் உதவி செய்துள்ளார். 50,000 பவுண்டுகள் சுகாதார மையம் ஒன்றிற்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
@PA
அத்துடன் கிரிக்கெட் அணி ஒன்றிற்கு 100,000 பவுண்டுகள் வழங்கியுள்ளார்.
இருப்பினும், தமது இயல்பில் எந்த மாற்றமும் இன்றி அவர் இருப்பதாகவே நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பழைய அந்த வணிகத்தில் ஈடுபடும் வாழ்க்கைக்கு திரும்ப அவர் ஆசைப்படுவதாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், லொட்டரியில் வென்ற தொகையில் பெரும்பகுதியை ஸ்டீவ் வங்கி ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.
அடுத்த 20 ஆண்டுகளில் அந்த தொகை மேலதிகமாக அவருக்கு 90 மில்லியன் பவுண்டுகளை ஈட்டித்தரும் என்றே கூறப்படுகிறது.