திருநெல்வேலி அரசுப்பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் பேருந்துக்குள்ளேயே குடைபிடித்தபடி பயணம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் மேற்கூரை ஒழுகி பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இருக்கைகள் ஈரமாகி பயணிகளின் உடமைகளும் நனைந்ததால் அவதியுற்ற பயணிகள் பேருந்துக்குள் குடைபிடித்த படி பயணித்தனர்.