அந்நியச் செலாவணி நெருக்கடி மட்டுமின்றி, ரூபாய் நெருக்கடியும் நாட்டில் எப்படி உருவானது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதாளத்திற்குச் செல்லவே வழிவகுக்கிறது
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தவறான பரிகாரங்களைச் செய்து கொண்டு இந்த நெருக்கடியை மென்மேலும் மோசமாக்கி இந்த நாட்டை அழிக்கிறார்கள்.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில், அரச வங்கி நிதிச் சந்தை நிலையற்ற தன்மைக்கு உள்ளாகின்றது.
இந்த மூன்று மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 15.5%ஆகக் குறைந்துள்ளது. இது பாதாளத்திற்குச் செல்லவே வழிவகுக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.