இவங்க தான் புது பயாலஜி டீச்சரா? வைரலாகும் ஹீரோயின் என்ட்ரி
டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீசன் 1 வெற்றியை தொடர்ந்து சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், பல புதிய நட்சத்திரங்களை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அறிமுகம் செய்து வைத்து வருகின்றனர். அந்த வகையில், காற்றுக்கென்ன வேலி தொடரின் மூலம் இளைஞர்களின் க்ரஷ் லிஸ்ட்டில் இடம்பிடித்த ப்ரியங்கா, கனா காணும் காலங்கள் சீசன் 2விலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இம்முறை மாணவியாக இல்லாமல் பயாலஜி டீச்சராக திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். அவரது என்ட்ரி வீடியோவானது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் நிலையில், புது பயாலஜி டீச்சருக்கு பொருத்தமான கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.